மணலிபுதூரில் 10 நூல்கள் வெளியீட்டு விழா, மல்லை சத்யா பங்கேற்பு

மணலிபுதூரில் 10 நூல்கள் வெளியீட்டு விழா, மல்லை சத்யா பங்கேற்பு
X

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் எழுத்தாளரும் பேராசிரியருமான டாக்டர் அம்பேத்கர் பிரியன் எழுதிய 10 நூல்களை மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டார்.

மணலிபுதூரில் 10 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் எழுத்தாளரும் பேராசிரியருமான டாக்டர் அம்பேத்கர் பிரியன் எழுதிய 10 நூல்கள் வெளியீட்டு விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.

சமுதாயத்திற்காக போராடிய தலைவர்களின் திரு உருவப் படங்களை திறந்து வைத்தபின் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பின்பு பேசிய அவர் திராவிட சமுதாயத்திற்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவப்படத்தை அஞ்சல் தலையை வெளியிட ஏற்பாடு செய்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எனவும்.

நமது நாட்டின் தன் இனத்திற்காகவும் இந்த மண்ணிற்காகவும் போராடி தன் உடலுக்கு தீப்பாச்சி உயிர் நீத்த பெண்களை தீப்பாத்து அம்மன் எனும் பெயரோடு தெய்வமாக வணங்கி வருகிறோம் எனவும்.

பெண்ணியத்திற்கு புகழாரம் சூட்டினார். பின்னர் நூல்களை வெளியிட்டு அம்பேத்கர் பிரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இன்னும் பல படைப்புகளை உருவாக்க ஆயுள் வேண்டியும் வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் மாவட்ட செயலாளர் மெய்யழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் அவயம், லெமூரியன், மாமல்லன் ஆகியோரும் புத்தகங்களை வெளியிட்டனர்.

இதனை கொண்டகரை ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வெள்ளிவாயில் ஊராட்சி மன்ற தலைவர் உமையாள் பொன் பாஸ்கர், சுப்பா ரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் மெலோடி அஸ்வினி உள்ளிட்டவர்கள் நூல்களைப் பெற்றுக் கொண்டனர் செல்வராசு சுப்பிரமணி நாகராஜ் மேலூர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!