காகங்கள் திடீர் இறப்பு- கால்நடைத்துறை ஆய்வு

காகங்கள் திடீர் இறப்பு- கால்நடைத்துறை ஆய்வு
X

பழவேற்காட்டில் 4 காகங்கள் திடீரென இறந்ததால் கால்நடைத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி பறவைகள் சரணாலயம் உள்ள பகுதியாகும். இங்கு உள்ளூர் பறவைகள் முதல், வெளிநாட்டு பறவைகள் வரை உள்ளன. இந்நிலையில், பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட குளத்துமேடு பகுதியில் 4 காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. கடந்த 4 நாட்களாக பறவைகள் ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக இறந்து போவதாகவும் மொத்தம் 4 காகங்கள் திடீரென இறந்துள்ளன.

இது குறித்து அப்பகுதி மக்கள் பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணனிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் வருவாய் துறையினர், கால்நடை துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு குளத்துமேடு பகுதியில் இறந்து போன காகங்களை ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!