கும்மிடிப்பூண்டி அருகே நடந்த கொலை தொடர்பாக இளைஞர் வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட கெல்லிஸ் என்கிற விஜய்.
Murder Case News -அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 20 நாட்களுக்கு முன்னர் கொலை நடந்துள்ளது அம்பலமானது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகனங்களில் பேட்டரி திருட்டு நடைபெற்று வந்தது. பேட்டரி திருடர்களை பிடிப்பதற்காக பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தைச் சேர்ந்த கெல்லிஸ் என்கிற விஜய் (வயது 21 )என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை முடிவுக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்ட கெல்லிஸ் என்கிற விஜய் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கும்மிடிப்பூண்டி இரயில்வே நிலையத்தில் தன்னை சிலர் தாக்கி தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாகவும், அதில் ஒருவரை சின்ன ஓபுலாபுரம் பாலாஜி திருமண மண்டபம் அருகே சந்தித்ததாகவும், அவரை அழைத்துச் சென்று அருகே உள்ள அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு சின்ன ஓபுலாபுரம் கிராமத்தில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவருக்கு மது விருந்து கொடுத்து பின்னர் கையில் இருந்த பேனா கத்தியை கொண்டு அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து பழிக்கு பழி வாங்கியதாகவும் கெல்லிஸ் என்கிற விஜய் வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் காவல் நிலைய போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை கண்டுபிடித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் குற்றவாளி போலீஸ் வாக்குமூலம் அளித்ததால் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ள முடியாத சிப்காட் போலீசார் கைது செய்யப்பட்ட கெல்லிசை புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்டது யார்? இவருக்கு கொலை செய்ய யாராவது உதவினார்களா? இவருடன் வேறு யார் யாருக்கு தொடர்புள்ளது? என்ற பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. கெல்லிஸ் என்கிற விஜய்யை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் தான் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. எனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெல்லிசை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிப்காட் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். கோர்ட்டு இதற்கான அனுமதி வழங்கிய பின்னர் கெல்லிசிடம் விசாரணை நடத்தினால் தான் கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவருக்கும் கெல்லிசுக்கும் இடையே பிரச்சினை இருந்ததற்கு காரணம் என்ன தெரிய வரும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu