போலீசாரை கண்டித்து உயர் மின்விளக்கு கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்

Tiruvallur News
X

ஆபிரகாம் உயர்மின்விளக்கு கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

Today Protest News -கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை கண்டித்து உயர் மின்விளக்கு கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் நடத்தினார்.

Today Protest News -கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று போராட்டம் நடத்தப்படுவது உண்டு. ஆனால் கும்மிடிப்பூண்டி அருகே போலீசாரை கண்டித்து ஒரு வாலிபர் உயர்மின் விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூர் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடி உள்ளது.

இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திரா, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30000 வாகனங்கள் தமிழகத்திற்கு வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்களின் டிரைவர்கள் பலருக்கு தமிழகத்தில் உள்ள இடங்களின் ஊர் விவரம் மற்றும் முகவரி தெரியாததால் எளாவூர் சோதனைச் சாவடியில் வழிகாட்டிகளாக நிற்கும் சிலருக்கு பணம் கொடுத்து வழிகாட்டுமாறு அவர்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றடைய வேண்டிய இடத்திற்கு அவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிமையாக செல்வது வழக்கம்.

இவ்வாறு வடநாட்டு லாரி டிரைவர்களுக்கு வழிகாட்டியாக செங்குன்றதை சேர்ந்த ஆபிரகாம் இருக்கிறார். அவர் வெள்ளிக்கிழமை அன்று எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சோதனை சாவடியில் உள்ள காவலர்கள் இருவர் ஆபிரகாமை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆபிரகாம் சனிக்கிழமை காலை திடீரென எளாவூர் அருகே கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள உயர் கோபுர மின்விளக்கின் உச்சியில் ஏறினார். அவர் உச்சிக்கு சென்றதால் அங்கு கூட்டம் கூடிவிட்டது. அவரை கீழே இறக்கும்படி கூறினார்கள். ஆனால் அவர் மறுத்து விட்டார் சோதனை சாவடி போலீசார் தன்னை தாக்கியதாகவும் அவர்கள் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் இதனால் மன உளைச்சலில் தான் தற்கொலை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் வந்து ஆபிரகாமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உயர் கோபுரத்தின் மீது யாராவது ஏறினால் ஆபிரகாம் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்தார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த ஆபிரகாம் பின்னர் உயர் கோபுர மின்விளக்கின் மேலே இருந்து கீழே இறங்கினார். அதன்பிறகு தான் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நிம்மதி அடைந்தனர். இந்த போராட்டத்தை வேடிக்கைபார்க்க அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தார்கள். அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர். இந்த போராட்டத்தால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!