கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது
பிரேம் குமார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடுமேடு பகுதியில் சனிக்கிழமை காலை வயல்வெளிக்கு சென்றவர்கள் அப்பகுதியில் ஒருவர் வெட்டி புதைக்கப்பட்டு இருப்பதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கூறினர். தொடர்ந்து போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் அந்த இடத்தை தோண்டி எடுத்து பிணத்தை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற இளைஞரை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது பிரேம்குமார் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவருடன் பழகி வந்ததும் அவர் அந்த அந்த இரு பெண்களுடன் பேசியதையும் அவர்களது புகைப்படங்களை வைத்து அந்த இரு பெண்களும் கடந்த ஒரு வருடமாக மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பறித்து இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் பிரேம்குமார் அந்த இரு பெண்களிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில் அந்த இரு பெண்கள் அவரை செங்குன்றம் பகுதிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ள சொன்னதாக கூறப்படுகிறது .
இதனைத்தொடர்ந்து பிரேம்குமார் அவரது நண்பரான பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பிரவீன் என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் செங்குன்றம் சென்றிருக்கிறார். அப்போது செங்குன்றம் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பல் பிரேம் குமாரை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதில் பயந்துபோன பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலை அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.கும்மிடிப்பூண்டி அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்ட நபர் பிரேம்குமார் என்பது உறுதியானது.
பின்னர் கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்திய போது மேற்கண்ட இரு பெண்களை புகைப்படம் எடுத்தும் அவர்கள் பேசிய பேச்சுக்களை பதிவு செய்து மிரட்டி கடந்த ஒரு வருடமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பறித்த பிரேம்குமார் மேலும் பணத்தை கேட்டதால் மன உளைச்சலுக்கு இருவரும் ஆளாகி இருக்கிறார்கள். இந்த சூழலில் அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராக கிடைத்துள்ளார்.
இந்த இரு பெண்களும் அவர்களிடம் தாங்கள் பிரேம்குமாரிடம் மிகவும் மன உளைச்சல் அடைவதாகும், தங்களது புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டி வருவதாக கூறினர்.
அதற்கு அசோக் நீங்கள் எப்படியாவது பிரேம்குமாரிடம் பணம் தருவதாக கூறி செங்குன்றம் வரவழையுங்கள். அவரது அடையாளத்தை தந்தால் அவருடைய செல்போனில் உள்ள உங்களது புகைப்படங்கள் குரல் பதிவுகளை அழித்து விடுவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.
இதை நம்பி அந்த இரு பெண்களும் பிரேம்குமாரை செங்குன்றம் வரச்சொல்லி பணத்தை தருவதாக கூற, பிரேம்குமார் அங்கு சென்றதாகவும் அதற்குமேல் தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறினர்.
தொடர்ந்து இது தொடர்பாக சோழவரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவர் அசோக்கின் நண்பரான சோழவரம் பகுதியை சேர்ந்த பூச்சி என்பவர் கேட்டுக்கொண்டதன் பேரில் நானும் வேறு இருவரும் செங்குன்றம் அருகே காத்திருந்து பிரேம்குமாரை மடக்கி அவரை அடித்ததாகவும், தொடர்ந்து அவரை விட்டு விட சொல்லி அசோக்கிடம் கூறி தாங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அசோக் , பூச்சி என்பவருடன் பிரேம்குமாரை பைக்கில் கடத்தியதாக கூறினார்.
தொடர்ந்து குமாரை கடத்திய அசோக் மற்றும் பூச்சி ஆகியோர் பிரேம்குமார் இரு நாட்கள் அடைத்து வைத்து அவரை சித்திரவதை செய்து அவரை கொலை செய்த விவரம் தெரியவந்தது.
இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள அசோக் மற்றும் பூச்சி உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வந்து தேடி வரும் நிலையில் அவர்கள் பிடிபட்ட பிறகு இந்த வழக்கின் முழு விவரமும் தெரியவரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu