பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
X

உயிரிழந்த அன்பு.

பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (40 ) எலக்ட்ரீசியன் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி பாமா என்கிற மனைவி வான்மதி(12) மகள் ஸ்ரீஹரி(10) மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அன்பு நேற்று நண்பர்களுடன் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அன்பு சேற்றில் சிக்கி ஆழத்திற்கு சென்றுள்ளார்.

இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.ஆனால் ஆழத்தில் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் போலீசார் மற்றும் தேர்வாய் சிப்காட்தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!