கும்மிடிப்பூண்டி: ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி: ரயிலில் அடிப்பட்டு  பள்ளி மாணவர் உயிரிழப்பு
X

கோப்பு படம் 

கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காய்லர்மேடு கிராமத்தில் வசித்து வருபவர் கல்லுமுத்து (40) இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ரித்திக்குமார் (17) இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே. எல். கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு பயின்று வந்தார்.

ரித்திக்குமார், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து பொன்னேரிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவன் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் காய்லர்மேடு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி