எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது

எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் திவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக இன்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து ஆந்திரா இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்தில் திடீரென ஒருவர் வேகமாக இறங்கி நடந்து சென்றார்.

இதை சுதாரித்துக்கொண்ட ஆரம்பாக்கம் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர் கொண்டுவந்த பையில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், சென்னை கொடுங்கையூர் சேர்ந்த வினோத்(31) என்பது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஞ்சா நெல்லூரில் இருந்து சென்னை பகுதிகளுக்கு விற்கப்படுவதாக முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது