கும்மிடிப்பூண்டி அருகே 14 நாட்களாக தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே 14 நாட்களாக தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
X

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஆள் குறைப்பில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலையை கண்டித்து 14 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ளது ஈசிஎல் எனப்படும் தனியார் தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் உரிய காரணமின்றி நான்கு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 14 தினங்களாக நடைபெறும் இந்த தொடர் போராட்டத்திற்கு தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் பெண் என பெருந்திரளானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலையை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.


Tags

Next Story
ai in future agriculture