கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து  தொழிலாளி பலி
X

பைல் படம்.

Police Investigation - பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Investigation -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(49). இவர் அங்குள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சப்ளையர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதில் வெங்கடேஷ் எதிர்பாராத விதமாக தரை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் மாதர் பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கிணற்றிலிருந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது வேறு யாராவது காரணமா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!