கும்மிடிப்பூண்டியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 2000 பேருக்கு பணி ஆணை

பணிஆணை பெற்றவர்களுடன் அமைச்சர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்த மெகா வேலை வாய்பப்பு முகாமிற்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, பொன்னேரி துரை சந்திரசேகர், அம்பத்தூர் ஜோசப் சாமுுவேல், மதுரவாயல் காரப்பாக்கம் கணபதி , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை இயக்குனர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 245 தொழிற்சாலைகள் சார்பில் 3000பணியிடங்களுக்கு ஆட்களை நேர்காணல் செய்தனர். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அரசின் மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற முகாம்,அரசின் சார்பில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பித்தல் ஆகியவையும் நடைபெற்றது.
மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பிற்கென தனி அரங்கில் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த முகாமில் வேலைக்காக 2000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உள்ளிட்டோர் வழங்கியதோடு, நிகழ்வில் 20 மாற்று திறனாளிகளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஷ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், ஜெ. முுர்த்தி கி.வே.ஆனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu