எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் மகளிர் தின விழா

எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் மகளிர் தின விழா
X

பெரியபாளையம் அருகே கல்பட்டு ஊராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கல்பட்டு ஊராட்சி மற்றும் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பு இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர்.

இதில்,கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், ஓட்டப்பந்தயம், ஓவியப்போட்டி,கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில்,வெற்றி பெற்ற மகளிர் மற்றும் மகளிர் குழுக்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயவேல் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

துணைத் தலைவர் நாராயணன்,வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் ப்ரியா அருணாசலம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். முடிவில்,கங்கா கௌரி நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future