பவானி அம்மன் ஆலயத்தில் சிறுமியிடம் செயின் பறித்த பெண் கைது

பவானி அம்மன் ஆலயத்தில் சிறுமியிடம் செயின் பறித்த பெண் கைது
X

கைது செய்யப்பட்ட கீதா.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் கூட்டத்தை பயன்படுத்தி சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடி மாதம் தொடங்கி 14வாரங்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். சென்னை விம்கோ நகரை சேர்ந்த பிரதீப் என்பவர் தமது குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் போது தமது மகள் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி காணாமல் போனதாக, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த கீதா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture