மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை எம்எல்ஏ டிஜே.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாநெல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள் குடிநீர் தாகத்தை தணிக்கும் விதமாக தர்பூசணி நீர் மோர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்கள் வழங்கப்பட் டது.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணி பாலன்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ப.சே.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்து சாமி, ஊராட்சி மன்ற தலைவர் மாநெல்லூர் லாரன்ஸ், திமுக நிர்வாகி ஏசுரத்தினம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu