விவேகானந்தர் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விவேகானந்தர் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விவேகானந்தர் பிறந்த நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தாணிபூண்டி அருகே ராமகிருஷ்ணாபுரம் போரூர் புதுநகர் பகுதியில் அமைந்துள்ள புவளம்பேடு டியூசன் சென்டரில் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லம் சார்பில் சாந்தி ஞானானந்தா வழிகாட்டுதலின்படி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் ஜே. கோபாலகிருஷ்ணன், ஏசி மணி, வேணு , சுரேஷ் நாராயணன், வேலு ஆகியோரின் ஏற்பாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வரும் 60 பழங்குடியின மாணவர்களுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர் அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி, மளிகை பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பு வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகள், மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நாள்தோறும் ஏழை எளியோருக்கு மூன்று வேலை இலவச உணவு வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்