மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

மின்மாற்றியை  பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

பெரியபாளையம் அருகே நிறுவப்பட்ட மின்மாற்றியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெரியபாளையம் அருகே புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 1. மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தொடர்ந்து வீடுகளில் பல்வேறு மின் சாதன பொருட்கள் சேதமடைந்து வந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனிடம். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் புதியதாக மின் மாற்றி ஒன்று மாரியம்மன் கோவில் எதிர்புறத்தில் நிறுவப்பட்டது. இந்நிலையில் மின் மாற்றி நிறுவப்பட்ட இடத்தின் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் திடீரென மின் மாற்றியை நிறுவ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் எதிர்ப்பு தெரிவிக்கும் வீட்டாருக்கும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கிராம மக்கள் மின் மாற்றியை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி திருப்பதி சென்னை கன்னிகைப்பேர் சாலையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்,

பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக திருப்பதி - சென்னை சாலையில் சுமார் 1.மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!