ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை

ஆரணி ஆற்றின் குறுக்கே மக்கள் சென்று வர பயன்படுத்தும் செம்மண் சாலை.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 5.க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் தேவைக்கேற்ப பொருட்களையும் வாங்கவும். கல்லூரி, பள்ளி மாணவி, மாணவர்கள், விவசாயிகள் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆகியோர் மங்கலம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலை வழியாக ஆரணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, செங்குன்றம், சென்னை, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களும் தண்ணீர் நிரம்பியது. மேலும் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சா டூர் ஏரி நிரம்பி அதிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஓடை வழியாக வந்து ஆரணி ஆற்றில் கலக்கும்.
இந்த தண்ணீர் சுருட்ட பள்ளி அணை கட்டிற்கு வந்து தேக்கி வைக்கப்பட்டு, அதன் உபரி நீர் வெளியேறி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கேளம்பாக்கம், கல்பட்டு, எனம்பாக்கம், குமரப்பேட்டை, ஆரணி, மங்களம் ஏ.என்.குப்பம், புது வாயல் பொன்னேரி வழியாக பழவேற்காட்டில் உள்ள வங்கக்கடலில் சென்று கலக்கும்.
இதனால் மங்களம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே மக்கள் சென்று வர பயன்படுத்தும் செம்மண் சாலை தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். மேலும் தண்ணீர் வருவதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் தேவைக்காக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி பெரியபாளையம் மீது சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும்.
இதில் அவ்வளவு தூரத்திற்கு சுற்றிச்செல்ல முடியாமல் கிராமத்தை சேர்ந்த சிலர் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். ஆண்டு பெய்த மழையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது சாலையை கடக்க கூலி தொழிலாளி ஒருவர் தண்ணீரில் இறங்கியதால் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில், ஆரணி ஆற்றில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தண்ணீரானது கரை புரண்டு ஓடும். அந்த நேரத்தில் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், இப்பகுதியில் விவசாய பெருமக்கள் அறுவடை செய்யும் பூ காய் கனிகளை சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலைமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சுற்றிச் செல்வதால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் இன்னலுக்கு ஆளாவதாகவும், இந்த ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலும் கட்டி தர வேண்டும் என்று பலமுறை சட்டமன்ற அமைச்சர் பெருமக்களுக்கு மனு அளித்தும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலனை கருதி ஆரணி ஆற்றின் குறுக்கே மங்களம் கிராமத்திற்கு செல்ல தரை பாலம் ஒன்று அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu