ரோட்டை சீரமைக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள் சாலை மறியல்

ரோட்டை சீரமைக்க கோரி அரசு பஸ்சை   சிறைபிடித்த கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்.

கும்மிடிப்பூண்டி அருகே சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சியில், மழை காலங்களில் சேறும் சகதியுமாக போக்குவரத்திற்கு உபயோகமற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சாலை அமைக்கப்படாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விரைவில் கிராமத்திற்கு சாலை அமைத்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!