தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
X

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை.

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிருபுழல்பேட்டை ஊராட்சியில் சூர்யதேவ் என்ற மின் உற்பத்தி மற்றும் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 6 தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்ய நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், மக்களின் கருத்து கேட்காமலும் சுற்றுச்சுவர் எழுப்பிய தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு அதிகாரிகளும் புகார் தெரிவித்த நிலையில், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து கும்மிடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் முறையாக வட்டாட்சியரிடம் மனுவை வழங்கிய கிராம மக்கள் தொழிற்சாலை விரிவாக்கத்தை தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?