குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர வாகன சோதனை

பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை. குட்கா கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை. குட்கா கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது இனிமேல் குற்ற வழக்குப் பதிவு செய்ய மாநில உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு தடைசெய்யப்பட்ட போதை புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தும், அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் உள்ள நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலத்தின் வழியே சென்னைக்கு குட்கா கடத்துவதை தவிர்க்கும் வகையில் பெரியபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சரக்கு வாகனங்களில் உள்ள பொருட்களில் மறைத்து குட்கா கடத்தப்படுகிறதா என பார்சல்களை பிரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குட்கா பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த பிறகு, அவற்றின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி, அந்த முடிவுகளின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குட்கா விற்பவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் ரூ.10 ஆயிரம் கூட நீதிமன்றங்களில் அபராதம் விதிக்கப்படுவதில்லை. சிறைத் தண்டனை என்பது அரிதிலும் அரிதாகவே விதிக்கப்படுகிறது. இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி முக்கிய தீர்ப்பை வழங்கியது.
மகாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்புத் துறையினர், குட்கா விற்பனை செய்த சில நபர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து விற்பனையாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், 'உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த தோடு, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் உள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. ஆனால், பல இடங்களில் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினர், போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu