ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் விழா
X
சிறப்பு அலங்காரத்தில் பாமா ருக்மணியுடன் மகாவிஷ்ணு.
திருக்கண்டலம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்தில் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா கடந்த 26 ஆம் தேதி அன்று தொடங்கி அன்று காலை கணபதி ஹோமம் யாகசாலை நிர்மாணம் லட்சுமி ஹோமம் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 27ம் தேதியான இன்று அதிகாலை கோபூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னர் 7 மணி அளவில் கும்ப புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை திருக்கண்டலம் பார்த்தசாரதி பட்டாச்சாரியர் தலைமையில் கொண்ட புரோகிதர்கள் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை அடுத்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடவிளாகம் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?