வடமதுரை ஊராட்சி எம்.சி. நகர் புதிய கூட்டுறவு பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

வடமதுரை ஊராட்சி எம்.சி. நகர் புதிய கூட்டுறவு பகுதிநேர  ரேஷன் கடை திறப்பு
X
Ration Shop Latest News -வடமதுரை ஊராட்சி எம்.சி. நகர் புதிய கூட்டுறவு பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

Ration Shop Latest News - வடமதுரை கிராமத்தில் புதிய கூட்டுறவு விநியோக கடையை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.ஜே.மூர்த்தி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அருகே வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை மற்றும் எம்.டிசி. நகரில் ஆகிய பகுதிகளில் சுமார்174 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க குளம் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்கி வருவார்கள். இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் நடந்த உங்கள் தொகுதியில் முதல்வர் என நடந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அப்பகுதி மக்கள் பகுதிநேர நியாய விலை கடை கேட்டு அப்பகுதி மக்கள் மனு கொடுத்திருந்தனர் இதையொட்டி எம்டிசி நகரில் பகுதி நேர கூட்டுறவு விநியோக கடை புதிதாக திறக்கப்பட்டது .

இதன் திறப்பு விழா ஊராட்சி தலைவர் காயத்திரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது . ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், துணைதாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி , ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.ஜெ.மூர்த்தி கூட்டுறவு விநியோக கடையை திறந்து வைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார் .

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் , சங்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், ரமேஷ் வார்டு உறுப்பினர் வைசாலி பாலாஜி,ராஜேஷ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story