இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்
X

பெரியபாளையத்தில் இருசக்கர வாகன திருடனை கைது செய்த காவல்துறையினர் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்த வருண் என்பவர் அண்மையில் சுமார் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி இருந்தார். கடந்த 15ஆம் தேதி இரவு இரவு இவரது வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருண் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பெரியபாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய போது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகன திருடன் அஸ்வக்கை கைது செய்து அவனிடம் இருந்த திருடு போன இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் மீட்டனர். தொடர்ந்து வேறு எங்கெல்லாம் கைவரிசையில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!