இரு வேறு வழக்குகளில் தொடர்புடைய போலி வழக்கறிஞர் உட்பட இருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் நந்திவர்மன் (27) என்பவர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 19ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் வந்த போலி வழக்கறிஞர் நந்திவர்மன் மற்றும் அவருடன் வந்த புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் ஆகியோரும் தங்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என அறிமுகம் செய்து கொண்டு அலுவலக உதவியார் வேலாயுதத்தை அவதூறாக பேசி உள்ளனர்.
மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்து வட்டாட்சியரை கோபப்படும் வகையில் பேசி வட்டாட்சியருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து போலி வழக்கறிஞர் நந்திவர்மன் உட்பட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
அதேபோல் வட்டாட்சியளித்த மற்றொரு புகாரின் பேரில், பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா (30) மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் மீதும், மேலும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எளாவூர் அருள் ஆஜர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தலைமுறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான போலி வழக்கறிஞர் நந்திவர்மன் மற்றும் சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போலி வழக்கறிஞர் நந்திவர்மன் மற்றும் வழக்கறிஞர் ஆனந்தன் ஆகியோர் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu