பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது

பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது
X
கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கும்மிடிப்பூண்டி அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த 50.வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில கூலி தொழிலாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், குருராஜா கண்டிகை ஊராட்சி பில்லா குப்பம் எஸ்டி காலனியை சேர்ந்தவர் நாகரத்தினம்மாள் (50) , இவரது கணவர் எல்லையா (வயது 57.) இவர்கள் இருவரும் தனது இரண்டு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகரத்தினம்மாள் மற்றும் அவரது கணவர் எல்லையா ஆகியோர் சுமார் 30 ஆடுகள் மற்றும் 10 மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று பில்லா குப்பம் அருகே கங்கை அம்மன் கோவில் பின்புறம் இருவரும் ஆடு மாடுகளை மேய்த்துக் கொடுத்திருந்தனர். அப்பொழுது மாலை 3 மணி அளவில் எல்லையா வழக்கம் போல் கங்கை அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்ட வட மாநில கூலிதொழிலாளர்கள் மூன்று பேர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகரத்தினம்மாவை குண்டு கட்டாக தூக்கி புதர் மண்டிய பகுதியில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மூன்று வட மாநிலத் இளைஞர்கள் தப்பி ஓடிய நிலையில் அலறல் சத்தம் கேட்ட அருகாமையில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் நாகரத்தினம்மாவை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் மாலை 3 மணி அளவில் சம்பவம் நடந்த நிலையில் மூதாட்டியால் அடையாளம் காட்டபட்ட இரண்டு வட மாநிலத்தவர்கள் சிப்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சி எஸ் ஆர் கூட பதிவு செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து நாகரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆர்.எஸ்.ஆர் எம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கிரீன் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா?..அப்போ அதுல கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேத்துக்கோங்க..உடம்புக்கு பல நன்மைகளை தருதாம்!!