கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
X

கஞ்சா பொட்டலம்.

கும்மிடிப்பூண்டியில் வடமாநில இளைஞர்கள் கஞ்சா விற்ற போது போலீசார் கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் சிப்காட் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகமாக சுற்றிக் கொண்டிருந்த 2 வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!