ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
X
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பட்டா கத்தியுடன் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பட்டா கத்தியுடன் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவங்களை தவிர்க்குமாறு ரயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தட மார்க்கத்தில் அவ்வப்போது பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. ரூட் தல போன்ற விவகாரங்களில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளை கொண்டு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கல்லூரி மாணவர்களின் மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு கண்காணிக்குமாறு ரயில்வே ஏடிஜிபி வனிதா சென்னை ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் சென்னை - கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை ரயில் மார்க்கத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டபோது அதில் இளைஞர்கள் இருவர் ஏறினர். சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இளைஞரை ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர்கள் இடுப்பில் பட்டா கத்தி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பட்டா கத்தியை பறிமுதல் செய்து இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து இளஞ்சிறார் உட்பட இருவரையும் கைது செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் பட்டா கத்தியுடன் ரயிலில் ரயில்வே போலீசிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business