கும்மிடிப்பூண்டி அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் மெட்ரிக் பள்ளி முப்பெரும் விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை அருகே பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும்10,11, 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் நினைவு பரிசு,பாடப் பிரிவுகளில் நூறு சதவிகிதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி,இப்பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்-அயராது பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும்,செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் டாக்டர் ஏ.பழனி முன்னிலை வகித்தார். அனைவரையும் கல்லூரியின் முதல்வர் பி.ஞானப்பிரகாசம் வரவேற்றார்.
இதில்,சிறப்பு விருந்தினராகடி.ஜே.எஸ்.கல்விக்குழுமத்தின் தலைவரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்துப்பேசினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி மற்றும் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு உதவி பெறும் வகையில் (ruraleducationsupport.com) ரூரல்எஜுகேஷன்சப்போர்ட் டாட் காம் என்ற இணைய சேவை முகவரியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதில்,சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் லோகமணி கலந்துகொண்டு புதிய மாணவர்களை வரவேற்று, ஊக்குவித்து பேசினார். இதன்பின்னர்,புதிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் அடங்கிய புத்தகப்பை,கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஊக்க தொகையுடன்-நினைவு பரிசையும்,சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு-அயராது பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ரொக்க பரிசு தொகையை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், இயக்குனர்கள் ஏ.விஜயகுமார், ஏ.கபிலன்,டி.தினேஷ், டி.ஜே.எஸ்.ஜி.தமிழரசன், உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம், ஆர்.ஜெயக்குமார்,ஏ.ராஜேஷ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் லட்சுமிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முடிவில்,நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu