ஆபத்தான முறையில் பயணம்: பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி அறிவுரை

ஆபத்தான முறையில் பயணம்: பள்ளி மாணவர்களுக்கு டி.எஸ்.பி அறிவுரை
X

கும்மிடிப்பூண்டியில் ஆபத்தான பயணம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி ரித்து அறிவுரை வழங்கினார்.

ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது மாணவர்களுக்கு டி.எஸ்.பி அறிவுரை.

கும்மிடிப்பூண்டியில் ஆபத்தான பயணம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி ரித்து அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் ஓடும் ரயில் மற்றும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவுரையின்படிதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரண்டாவது நாளாக கும்மிடிப்பூண்டி சரக எல்லை துணை கண்காணிப்பாளர் ரித்து கே எல் கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற அனாகரிக செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்ப்பது என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அகிலா, உதவி ஆய்வாளர் அழகேசன், பாஸ்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் மீர்அலி, உதவித் தலைமையாசிரியர்கள் வள்ளிமுத்து, சரவணன் ஆகியோர் பங்கேற்று அறிவுரை வழங்கினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!