தையல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்
பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழை வழங்கிய ஒன்றிய குழு தலைவர் ரமேஷ்
பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தையல் பயிற்சி, அழகு கலை பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ்களை எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் ஊராட்சியில் இயங்கி வரும் அவார்டு தொண்டு நிறுவனம் இந் நிறுவனத்தின் சார்பில் 30 பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்தது.
ஆறு மாதங்களில் பயிற்சி நிறைவு பெற்றது. இப்பயிற்சி நன்றாக கற்றுக்கொண்டு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கன்னிகைபேரில் உள்ள அவார்டு தொண்டு நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அவார்டு தொண்டு நிறுவனத்தின் செயலாளர் டி.கல்யாணி தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் தணிகாசலம், உமா வினோத், இந்திராணி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டு பேசுகையில். இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டி வாழ்க்கையில் அவர்கள் முன்னேற இதுபோன்ற தையல் பயிற்சி மற்றும் அழகு கலை உள்ளிட்டவற்றை கற்றுக் தருகிறது. இதனால், அவர்களுக்கு அவர்கள் மீது தன்னம்பிக்கை ஏற்படும். அந்த வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்விதமாக செயல்பட்டு வரும் அவார்டு தொண்டு நிறுவனத்திற்கும் அதன் செயலாளர் கல்யாணி மற்றும் அதில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார். பின்னர் பயிற்சி பெற்று முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் கீதா செந்தில்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அவார்டு தொண்டு நிறுவனத்தின் செயலாளர் கல்யாணி பேசியதாவது: கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள். எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கு சரிதானோ என்ற பழமொழிக்கு ஒப்பாக பெண்கள் சுயமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்கள் கைத்தொழில் கற்றுக் கொண்டுள்ளனர். இதனால் பெண்கள் சுய சார்புடன் தங்களுடைய குடும்பத்தை நடத்த முடியும். தானும் வளம் பெற்று பிறரையும் பலப்படுத்துவதை இந்த பயிற்சியின் நோக்கம் என்று கூறினார். பெண்கள் சுய சம்பாத்தியத்தில் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக தையல் பயிற்சி, அழகு கலை பயிற்சி உள்ளது என்பதை எடுத்துக் கூறினார்.
முடிவில், அனுசுயா ராம்தாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், ரஜினி, ராஜன், ஈஸ்வரி, ஜெஸ்டினா, மோகனசுந்தரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu