ஆடி கடைசி ஞாயிறு: பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆடி கடைசி  ஞாயிறு: பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்
X
ஆடி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

ஆடி மாதம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். ஆடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பெரியபாளையம் கோவிலுக்கு வந்துள்ளதால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 1 கிமீ தூரம் இரண்டு பக்கங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 14 வாரங்கள் தொடர்ந்து திருவிழா நடைபெற்றாலும் ஆடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்ட நிலையில் அங்கிருந்த காவல்துறையினரும், பொதுமக்களும் வழி ஏற்படுத்தி அம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

அதிகாலை முதலே பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளதால் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்