திருவள்ளூர்: கன்னிகை பேரில் பெண்களுக்கு இலவச பயிற்சி மைய துவக்க விழா
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேரில் தொண்டு நிறுவனம் சார்பில் தையல் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேரில் இயங்கி வரும் அவார்டு தொண்டு நிறுவனம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு கிராமத்திலுளள பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி. மற்றும் பெண்கள் அழகு சம்பந்தமான பியூட்டிஷியன். பயிற்சி ஆர்ரியே,எம்ப்ராய்டிங் டிசைனிங் ஒர்க் உள்ளிட்ட பயிற்சி மைய துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவார்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கல்யாணி தலைமை வகித்தார்
ஊராட்சி மன்ற துணை தலைவர் மேனகா சுப்பிரமணி, சரசு வெங்கடேசன், உமா வினோத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், கே.வி. உதயகுமார், இந்தியன் வங்கி துணை மேலாளர் கீதா செந்தில்குமார்,தணிகாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பயிற்சி மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்
இந்நிகழ்ச்சியில் பிரேம் ராஜ், ஊராட்சி செயலர் பொன்னரசு , ஆர்.செல்வகுமார், சதீஷ், ஜெகன், வேழ வந்தான், வள்ளி, சதீஷ், வைகோ ராஜன், வெங்கடேசன் ஆசிரியர், அறிவழகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனுசுயா ராமதாஸ் நன்றி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu