திருவள்ளூர்: தி.மு.க. சார்பு அணி அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பம்

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜனிடம் வழங்கினர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழகத்தில் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அணி, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்றுச்சூழல் அணி, அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி, அயலக அணி உள்ளிட்ட அணிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி பெருவாயல் பகுதியில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கிய விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட கழகத்தினர் அதனை பூர்த்தி செய்து இளைஞர் அணி அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்ப படிவத்தை கே.வி. லோகேஷ், வடமதுரை அப்புன், தில்லை குமார், சங்கர் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அணிக்கு ராஜேஷ், ஆகியோர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஜே. கோவிந்தராஜனிடம் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வழங்கினர். உடன் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.ஜே.மூர்த்தி, பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியவேல், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், தானசேகர்,முனிவேல், ரவிச்சந்திரன், சீனிவாசன். முகமதுமொய்தீன், ஜெ. முனுசாமி,சிவாஜி, சிவா, சண்முகம்,ஞானசேகர். ரவி. டில்லிசங்கர். விமல் ராஜா. கௌதம். அசோக். ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu