திருவள்ளூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிப்பு

திருவள்ளூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிப்பு
X
Latest Crime News Today- திருவள்ளூர் மாவட்ட பெரியாபளையம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் நகை பறிக்கப்பட்டது.

Latest Crime News Today- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அக்கரபாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் அம்மு(36). கணவர் பாபு இறந்த நிலையில் கூலித்தொழில் செய்து அம்மு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாரர். நேற்று காலை கன்னிகை பேர் பகுதியில் உள்ள வங்கிக்கு புதிய கணக்கு தொடங்க தன் 5.வயது குழந்தையுடன் சென்று புதிதாக வங்கி கணக்கு பதிவு செய்து கொண்டு மதியம் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அக்கரபாக்கம் ஏரிக்கரை வளைவு பகுதியில் அம்மு தன் குழந்தையுடன் நடந்து சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அம்மு கழுத்தில் அணிந்திருந்த 3.சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற போது அம்மு கூச்சமிட்டார். அதில் பாதி அறுந்த நிலையில் ஒரு சவரன் அளவிற்கு எடுத்துக்கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏரி தப்பி சென்றனர் .

இதுகுறித்து அம்மு பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!