அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி

அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி
X

திருவள்ளூர் மாவட்டம் அமுதாம்பிகை உடனுறை அமிர்தலிங்கேஷ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே அமுதாம்பிகை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆமிதா நல்லூர் கிராமத்தில் குரு பாம்பாட்டி சித்தர் குரு சிவஞான சித்தர் வாழும் புன்னியஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அமுதாம்பிகை உடனுறை அமிர்தலிங்கேஷ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சியில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நந்தி கொடியேற்றுதல், கோபூஜை, சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 108 வாசனை திரவியங்களால் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு செந்தமிழில் ஆகம் முறைப்படி யாகத்துடன் அமுதாம்பிகை, அமிர்தலிங்கேஷ்வரர் உற்சவருக்கு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future