பூச்சிஆத்திபேடு அங்காள ஈஸ்வரி காேவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

பூச்சிஆத்திபேடு அங்காள ஈஸ்வரி காேவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
X

பூச்சிஆத்திபேடு அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் 8-ம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 250 பக்தர்கள் தீ மிதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,பூச்சிஆத்திபேடு கிராமம், மகாலட்சுமி நகரில் அருள்மிகு அங்காள ஈஸ்வரி-பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 8-ம் ஆண்டு தீமிதி திருவிழா மற்றும் மாசி திருவிழா நேற்று நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 92 பெண்கள் வேப்பம்பட்டு செல்லியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால்குடம் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். அன்று இரவு அங்காள ஈஸ்வரி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சனிக்கிழமை மதியம் அன்னதானம் நடைபெற்றது. அன்று இரவு அக்கினி கப்பரை கிரகத்தில் ஏந்திய வண்ணம் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு காப்பு கட்டி விரதம் இருந்த 250 பக்தர்கள் வேப்பம்பட்டு செல்லியம்மன் கோவில் வளாகத்தில் புனித நீராடினர். பின்னர் பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கட்ராமன் தலைமையில் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
ai marketing future