ஸ்ரீ தொம்பரை ஆண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ தொம்பரை ஆண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
X

துராபள்ளம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ தொம்பரை ஆண்டவர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வரப்படும் காட்சி  

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த துராபள்ளம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ தொம்பரை ஆண்டவர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், துராபள்ளம் கிராமம், எளாவூர் ரயில் நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தொம்பரை ஆண்டவர் திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை கணபதி பூஜை, கிராம தேவதை வழிப்பாடு, புதிய சிலைகள் கரி கோல ஊர்வலம், அனுக்ஞை,கணபதி பூஜை, கோ பூஜை, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

வியாழக்கிழமை புதிய சிலைகள் கண் திறத்தல், சயனாதி வாசம், இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், அஸ்திர ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது.

இதன் பின்னர், யாத்ரா தானம், புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு அருள்மிகு தொம்பரை ஆண்டவர், அருள்மிகு முனீஸ்வரர்,அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் விமான கோபுரங்கள், மூலவர்கள் மற்றும் நாக தேவதைகள் உள்ளிட்டவைக்கு தாம்பரம் சந்திரசேகர் சர்மா தலைமையில் வந்திருந்த 20 பேர் கொண்ட வேத விற்பனர்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.


இதன் பின்னர், மகா அபிஷேகம், அலங்காரம், தீப-தூப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோவில் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கோவிந்தராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, எளாவூர் கூட்டுறவு வங்கி தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்