தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர்

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர்
X

திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் மும்மத வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். 

ஆரம்பாக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் இன்று தனது பரப்புரையை தொடங்கினார்.

தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் கோவில், தேவாலயம், மசூதி என மும்மத வழிபாட்டுடன் தனது பிரச்சாரத்தை சசிகாந்த் செந்தில் தொடங்கினார். பிறந்த திறந்த ஜப்பில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து, பாஜகவை தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை குறித்து எடுத்துரைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வேலை வாய்ப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து வருவதாகவும், அனைத்து தேவைகளையும் மக்களுக்கு நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

பேண்ட் வாத்தியங்கள் முழங்க திறந்த வெளி ஜீப்பில் பிரச்சாரம் தொடங்கினார் உற்சாகமாகவும், செல்லும் இடங்களில் பட்டாசு வெடித்தும் வேட்பாளரை உற்சாகமாக தொண்டர்கள் வரவேற்றனர். அவருடன் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிரிராஜன், திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்டத் தலைவர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், சி.எச்.சேகர், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பாசே. குணசேகரன், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!