கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

பைல் படம்

கும்மிடிப்பூண்டி அருகே, ரெட்டம்பேடு கிராமத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன். இவர் தனது நண்பர்களுடன் இன்று மாலை 3 மணியளவில் ரெட்டம்பேடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்பாேது எதிர்பாராத விதமாக லட்சுமணன் என்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story