இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன் கண்முன் மனைவி இறந்த சோகம்

இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன் கண்முன் மனைவி இறந்த சோகம்
X

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் விஸ்வ பிரியா.

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன் கண்முன் மனைவி இறந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருமணமாகி 2 மாதமே ஆன இளம் பெண் கணவன் கண்முன்னே துடித்து துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மதர்பாக்கம் அடுத்த பாதிரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகார்ஜுனா ( வயது 28). இவர் கடந்த மாதம் விஸ்வ பிரியா (வயது 25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.இந்த நிலையில் குடும்ப விஷயமாக இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவரும் கவரப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது கும்மிடிப்பூண்டி அடுத்த குருராஜா கண்டிகையில் நேர் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தலைகீழாக விழுந்த விஸ்வ பிரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.பலத்த காயமடைந்த விஸ்வ பிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர உறுதிக்கு தகவல் கொடுத்தனர். அழைத்துச் செல்ல காலதாமதமாக வந்த 108 அவசர ஊர்தியில் விஷ்வ பிரியாவை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் விஸ்வ பிரியா பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து விஸ்வ பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 அவசர ஊர்திக்காக விஸ்வ பிரியா காத்துக் கொண்டிருந்தபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!