உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் பெரம்பூர் பகுதி மக்கள் அவதி

உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் பெரம்பூர் பகுதி மக்கள் அவதி
X

உயர் கோபுர மின் விளக்கு.

பெரம்பூர் பாட்டை சந்திப்பு பகுதியில் உள்ள உயர் கோபுரம் மின் விளக்கு எரியாதால் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த இலட்ச்சுவாக்கம் ஊராட்சியில் சுமார் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சிக்குட்பட்ட பெரம்பூர் கிராமம் உள்ளது இப்பகுதி மக்கள் விவசாயிகள் நாள்தோறும் பெரியபாளையம். ஊத்துக்கோட்டை. திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பெரம்பூர் பாட்டை என்று இடத்திற்கு வந்து இங்கிருந்து பேருந்துகள் மூலம் அவர்கள் செல்வார்கள் பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலை பெரம்பூர்பாட்டை சந்திப்பு பகுதியில் மின்விளக்கு அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கை ஏற்று கடந்த 2019-20 அன்று அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் நிதியில் ரூ.4.லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்று அமைக்கப்பட்டு அன்று மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த ஓாண்டு காலத்துக்கு முன்பு இந்த உயர் கோபுரம் மின்விளக்கு பராமரிப்பு இல்லாத காரணத்தால் பழுதாகி மின்விளக்குகள் எரியாத நிலையில் கும்மிருட்டாக அந்தப் பகுதி காட்சியளிக்கிறது.

மேலும் சுற்று வட்டார பகுதி நோயாளிகள் பெரம்பூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பெரம்பூர் பாட்டை பகுதி வழியாக தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதேபோல் கிராமத்திற்குச் செல்ல பெரம்பூர் பாட்டை பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கு மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் பெரம்பூர் பாட்டை பகுதியில் பேருந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில் கிராமத்திற்கு இருட்டில் நடந்து செல்கின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இந்தப் பகுதியில் மின்விளக்கு எரியாத காரணத்தினால் சாலையில் விஷம் நிறைந்த பாம்புகள் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் பழுதாகி கிடைக்கும் இந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்