கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
X

பைல் படம்.

விநாயகர் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வசந்தம் பஜார் பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் ஐயப்பன், விநாயகர், மூலவர்கள் ஆவார். இக்கோவிலுக்கு கும்மிடிப்பூண்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து தாங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி செல்வார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கோயிலை திறந்து பூசாரி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் முடித்து மாலை கோவில் நடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலையில் கோவில் திறக்க வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டிய கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூபாய் 50,000 ஆயிரத்தை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இந்து அறநிலை அலுவலர் திருவேணி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil