குடிபோதையில் உடன் பிறந்த தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணன்

குடிபோதையில் உடன் பிறந்த தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணன்
X

கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார்- கைதான சுப்பிரமணி.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே குடிபோதையில் தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த கெட்னமல்லியில் ஏழுமலை-லட்சுமி தம்பதியரின் மகன் சுரேஷ்குமார் (வயது 35). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை வைத்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது அண்ணன் பிட்டர் என்கிற சுப்பிரமணி (வயது 45 )என்பவர் நள்ளிரவில் குடிபோதையில் உடன் பிறந்த தம்பியை கோடாரியால் வெட்டியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் அவசர ஊர்தியின் மூலம் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கவரபேட்டை போலீசார் சுப்பிரமணியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

மது போதையில் பலரிடம் இதுபோன்ற வம்பு வழக்குகளில் ஈடுபடும் பிட்டர் என்கிற சுப்பிரமணி மது போதையில் தம்பியையே கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!