கும்மிடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன்

கும்மிடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன்
X

தீக்குண்டத்தில் தவறி விழுந்த சிறுவன் மீட்கப்படும் காட்சி.

கும்மிடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழாவின்போது தீ குண்டத்தில் இறங்கிய சிறுவன் தவறி விழுந்து தீ காயம் அடைந்தான்.

கும்மிடிப்பூண்டி அருகே தீமிதி திருவிழாவில்தீ குண்டத்தில் இறங்க வந்த சிறுவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தான். 40 சதவீத காயங்களுடன் சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏலாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது காட்டு கொல்லை கிராமம். இங்குள்ள சுமார் 300 குடும்பத்தினர் வழிபட்டு வரும் சக்தி மாரியம்மன் திருக்கோவில் கடந்த ஆண்டு கட்டப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கோவில் நிர்வாகத்தால் ஓராண்டு நிறைவையொட்டி தீமிதி திருவிழா செய்வதற்கான முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு 100 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து ஆலயத்தில் நாள்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. நிறைவாக காப்பு கட்டி விரதம் இருந்த100 பக்தர்களும் நேற்று இரவு தீ குண்டத்தில் இறங்கினார்கள். அப்போது காட்டுக்கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது 7வயது மகன் மோனிஷ் தீக்குழி இறங்கினான்.

அப்போது திடீரென நிலை தடுமாறிய மோனிஷ்தீ குண்டத்தில் தவறி விழுந்தான். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவனை மீட்டனர். இதில் சிறுவனுக்கு 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை சென்னை கே. எம்.சி. அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.இது குறித்து ஆரம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தீ குண்டத்தில் சிறுவன் இறங்கி தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது