பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சாய்பாபா கோவில் 6ம் ஆண்டு வருடாபிஷேக விழா

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சாய்பாபா கோவில் 6ம் ஆண்டு வருடாபிஷேக விழா
X

ஷீரடி சாய்பாபா சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.

பெரியபாளையம் அருகே ஷீரடி சாய்பாபா கோவில் ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா திருக்கோவிலில் நடந்த ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம்-ஆரணி ராள்ளபாடி கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலின் ஆறாம் ஆண்டு வருட அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 6:00 மணி அளவில் மங்கள வாத்தியம் காக்கட ஆரத்தி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் கைகளால் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு கணபதி ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம், 108 தாமரை குபேர மகாலட்சுமி ஹோமம், தீர்க்க ஆயுள் வேண்டி ஆயுள் ஹோமம், சாய்பாபா திருவருள் வேண்டி மூல மந்திர ஹோமம், இதனையடுத்து குரு பயிற்சி நடந்ததையொட்டி நவக்கிரக சாந்தி பரிகாரம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது.


தொடர்ந்து பக்தர்கள் 108.கலசங்களை கொண்டு மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு பாலாபிஷேகமும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாபாவிற்கு வண்ணமலர்கலாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மதியம் 12 மணி அளவில் மத்தியானம் ஆரத்தி பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பாபாவின் சிறப்பு ஆரத்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் பல்ல க்கு சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!