பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜனனி (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜனனி வீட்டில் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தியதை இவரது தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்த ஜனனியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu