கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் குழு இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
'அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே சார்பில், நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதற்காக, இந்தியா முழுவதும் 1275 ரயில் நிலையங்களும் தமிழகத்தில் 60 ரயில் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில், முக்கியத்துவம் வாய்ந்த கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ரயில்வே குழுவினர் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது வணிக வளாகம், எலக்ட்ரானிக் தகவல் பலகை, ரயில் பயணியர் ஓய்வு அறை, மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், தரமான அடிப்படை வசதிகள், பார்க்கிங் வளாகம், ‛லிப்ட’ வசதியுடன் நடைபாலம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது, மண்டல மேலாளர் கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ; தமிழகத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான இரண்டாம் கட்ட ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்த பின் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்,
மேலும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிறுத்தப்படுவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
முன்பதிவு கவுண்டரில் பதிவாளர்கள் நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை உடனடியாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொது கவுண்டரில் கடந்த நான்காண்டுகளாக ஒரு கவுண்டர் மூடப்பட்டுள்ளது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu