தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
கும்மிடிப்பூண்டியில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் தமிழக அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பில் கும்முடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய 16 வது பொதுக்குழு கூட்டம், ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்தல், மற்றும் அங்கன்வாடி பணியாளர் கலைச்செல்வி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு சத்துணவு அமைப்பாளர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் தனபாக்கியம் தலைமை தாங்கினார். விழாவிற்கு சங்க நிர்வாகிகள் பாரதி, சக்கரவர்த்தி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். சத்துணவு அமைப்பாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜீவா வரவேற்றார்.
தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் சங்க மாநில பொது செயலாளர் குப்பம்மாள் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.ஆறுமுகம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆ. இரவி வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர்கள் சங்க முன்னாள் ஒன்றிய தலைவர் டி.வி. மணி , தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குணசேகரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் சந்தோஷ் மேரி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் கோ.முத்துகுமார், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் மு.பொன்னிவளவன் விளக்கவுரை ஆற்றினர். முடிவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க நிர்வாகி வி.ஜி.காந்திமதி நன்றியுரை கூறினார்.
இந்த மாநாட்டில் ஓய்வுபெறும் சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருவதை உயர்த்தி மாதம் ரூபாய் 9000 வழங்கவேண்டும்,சத்துணவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி மூப்பு அடிப்படையில் அனைத்து துறைகளிலும் பதிவுரு எழுத்தர் ஆக பதவி உயர்வு ஆவன செய்ய வேண்டும்.
சத்துணவு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒட்டு மொத்த பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ. 1000 வழங்கி வருவதை உயர்த்தி ரூ.3000 ஆகவும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கி வருவதை ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கி ஓய்வுபெறும் சத்துணவு பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.அரசு மானியம் தற்பொழுது ஒரு மாணவருக்கு ரூபாய் 2.25 வழங்கப்பட்டு வருவதை ஒரு மாணவருக்கு ரூபாய் ஐந்தாக உயர்த்தியும் சில்லறை செலவினம் தொகை ரூபாய் 50 லிருந்து 100 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக இயற்றப்பட்டது.
மேலும் நிகழ்வில் சங்கத்தின் புதிய ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதுடன் பணிநிறைவு பெற்ற அங்கன்வாடி பணியாளர் கலைசெல்வி பாராட்டி கௌரவிக்கப்பட்டு அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu