பெரியபாளையம் அருகே பூமிக்குள் சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுப்பு

பெரியபாளையம் அருகே பூமிக்குள் சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுப்பு
X
பூமிக்குள் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி சிலைகள். 
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பூமிக்குள் சிவலிங்கம், நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் அண்ணாமலை என்ற விவசாயின் விளை நிலத்தின் அருகே ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கருங்கல் சிலை ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனை பத்திரமாக தோண்டி எடுத்ததில் பழமை வாய்ந்த சிவலிங்கம் என்பது தெரிய வந்தது. அதன் அருகே மேலும் தோண்டியதில், நந்தி சிலை ஒன்று புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மண்ணில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர். மேலும் இதனை அறிந்த ஆத்துப்பக்கம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிவலிங்கத்தை மற்றும் நந்தி பகவானை பார்ப்பதற்கு கூட்டமாக கூடினர். சிலைகள் குறித்து பெரியபாளையம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story