தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் தற்கொலை தடுப்பு தின விழா பேரணி

தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் தற்கொலை தடுப்பு தின விழா பேரணி
X
தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணைவேல் செவிலியர் தனியார் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மஞ்சங்காரணை வேல் செவிலியர் கல்லூரி மாணவர்கள் சார்பில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் அங்கமான வேல் செவிலியர் கல்லூரி சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதை முன்னிட்டு வேல் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை முதல் பண்டிகாவனூர் வரையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாகச் சென்றனர்.

இப்பேரணியை அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ்,சோழவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி,கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ.ஹேமமாலினி, துணை முதல்வர் ஜி.எம்.ரம்யா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ்,உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சதிஷ் தேவ்,நிர்வாக பொது மேலாளர் சுகவனேஸ்வர்,ஏ.எச்.எஸ் துணை முதல்வர் கிஷோர்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு